அலட்சியம் வேண்டாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
03:32

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று வரை 1291பேர் பாதிக்கப்பட்டனர். ஏப்ரலில் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிப்பு இருந்த நிலையில் 'ரெட் அலார்ட்' பகுதிகளில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு உயர்ந்தது. 14 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.



மருத்துவக்கல்லுாரி, அரசு மருத்துவமனைகள், தனியார் விடுதிகள் 2670 படுக்கைகள் தயார் செய்துள்ளது. தாலுகா வாரியாக 6 இடங்களில் கொரோனா கேர் சென்டரில் 498 பேரும், வீட்டு தனிமையில் 23 பேர் உள்ளனர். தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.



இங்கு 430 பேர் அனுமதித்து 269 பேர் குணமாகினர். 150 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைவாக இறப்பு 0.07 சதவீதம் உள்ளது.தாமதத்தில் ஆபத்துசாதாரண காய்ச்சல் , இருமல் தான் என இருக்கக்கூடாது. சர்க்கரை, இருதய நோயாளிகளான முதியோர் பாதிப்பு என தெரிந்தவுடன் சிகிச்சைக்கு வர வேண்டும்.



பலர் அலட்சியத்தால் தாமதமாக அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால் சுவாச குழாயில் இருந்து கொரோனா தொற்று நுரையீரலை பாதிக்கும். சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்டு ஆபத்தில் முடிகிறது. அது தவிர்க்கப்பட வேண்டும்.



தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா ஐ.சி.யு. வார்டு, சிறுநீரக பாதிப்பில் உள்ளவர்களுக்கு டயாலிஸ் செய்ய தனி வார்டு, 190 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. ஆபத்தானவர்களை ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ஊசி செலுத்தி உயிர் காக்கின்றனர். இதுவரை 10 பேர் இம்முறையில் காப்பாற்றியுள்னர்.



ஒத்துழைப்பு வேண்டும்



கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ''கொரோனா பரிசோதனை முழுவீச்சில் நடக்கிறது. மககள் தேவையின்றி வெளியே வரவேண்டாம். ஒத்துழைத்தால்தான் நோயை கட்டுப்படுத்த முடியும். தேனி, பழனிச்செட்டிபட்டி, போடி , ஆண்டிபட்டி, கம்பம் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்படும். இங்கு ஜூலை 10 (நாளை) முதல் நேரக்கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். ஊரடங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X