கோவையில் 55 பேருக்கு கொரோனா: பாதிப்பு 927; பலி 9 ஆக உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
10:14

கோவை:கோவையில் நேற்று ஒரே நாளில், 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிப்பு 927, இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.கோவை, பொள்ளாச்சி அடுத்த நல்லிக்கவுண்டம் பாளையத்தில் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த, 13 வடமாநில தொழிலாளர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்னுார் முதலிபாளையம் பகுதியை சேர்ந்த, எட்டு பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது.கோவை மரக்கடை பகுதியில் இயங்கி வந்த எலக்ட்ரிக் கடை ஒன்றின் பணியாளர்கள், 10 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.குனியமுத்துார், பேரூர் செட்டிபாளையம், பீளமேடு பி.ஆர்.புரம்., பாலமலை ரோடு, இடையர்பாளையம், காளப்பட்டி மகாராஜாநகர், விளாங்குறிச்சி அன்னை வேளாங்கண்ணி நகர், எஸ்.எஸ்.குளம், ஜோதிபுரம், கைக்கோளாபாளையம், ஆகிய பகுதிகளை சேர்ந்த, மொத்தம் 55 பேருக்கு நேற்று ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 33 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள் மற்றும் ஐந்து பேர் குழந்தைகள்.பாதிக்கப்பட்டவர்கள், கோவை இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொடிசியா கண்காணிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 927 ஆக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை, நான்காயிரத்தை தொடும் என சுகாதார துறையினர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதியவர் பலிகோவை, வீரபாண்டி பிரிவை சேர்ந்த, 65 முதியவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நான்கு பேர், கொரோனா பாதிப்புடன் ஜூலை 2ம் தேதி, இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று உயிரிழந்தார். இவரது உடல் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்புடன் பிரசவம்கோவை ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த, 25 வயது கர்ப்பிணி, போத்தனுாரை சேர்ந்த 35 வயது கர்ப்பிணி, கொரோனா பாதிப்புடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இருவருக்கும் நேற்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், இருவருக்கும், 3.2 கிலோ மற்றும் 2.5 கிலோ எடையில் அழகான பெண் குழந்தைகள் பிறந்தன.''தாய் - சேய் நலமுடன் உள்ளனர். குழந்தைகளுக்கு இரண்டு நாட்கள் கழித்து, கொரோனா பரிசோதனை செய்யப்படும். இங்கு கொரோனா பாதிப்புடன் வந்த, ஐந்து கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது,'' என, இ.எஸ்.ஐ.,டீன் நிர்மலா தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X