கோவையில் சிக்கியது 'மூலிகை மைசூர்பாக்': 'கொரோனா கொல்லி' விற்ற கடைக்கு 'சீல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
10:24

கோவை:'ஒரே நாளில் கொரோனாவை விரட்டி விடும் மூலிகை மைசூர்பாக்' என்று கூறி, விற்பனை செய்த, கோவை ஸ்வீட் கடைக்கு, உணவு பாதுகாப்புத்துறையினர், 'சீல்' வைத்தனர்.'கொரோனாவால் வேலை போய்விட்டதே, தொழில் நொடிந்து விட்டதே, எப்போது நிலைமை சரியாகுமோ' என்று கவலைப்படுவோர் பலர் இருந்தாலும், மக்கள் அச்சத்தை முதலீடாக்கி, பணம் சம்பாதிக்க நினைக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான், கோவை, தொட்டிபாளையம், 'ஸ்ரீராம் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ்' கடை உரிமையாளர் ஸ்ரீராம்.இவர், 'கொரோனாவை விரட்டும் மூலிகை மைசூர்பாக்' என்று கூறி, மைசூர்பாக் தயார் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். 'சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட, 19 மூலிகைகளை பயன்படுத்தி தயார் செய்த மைசூர்பாக் சாப்பிட்டால், ஒரே நாளில் கொரோனாவை விரட்டி விடலாம்' என்று கூறி, விளம்பரமும் செய்தார்.அச்சத்தில் இருக்கும்மக்கள் பலரும், 'கொரோனா வந்தாலும் குணமாகி விடும்' என்று நம்பி, மைசூர்பாக் வாங்கிச்செல்ல ஆரம்பித்தனர்.உலக சுகாதார நிறுவனமே, கொரோனாவுக்கு மருந்தில்லை என்று கூறி வரும் நிலையில், 'ஒரே நாளில் கொரானாவை மைசூர்பாக் விரட்டி விடும்' என்று ஸ்வீட் கடை உரிமையாளர் தம்பட்டம் அடித்து, வியாபாரம் செய்வதை அறிந்து, அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.நேற்று காலை, ஸ்வீட் கடையில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள், 'ரெய்டு' நடத்தினர். சுகாதார இணை இயக்குனர் கிருஷ்ணா, மாவட்ட சித்த மருத்துவர் தனம் ஆகியோரும் ரெய்டில் பங்கேற்றனர். விசாரணையில், எந்த ஒரு துறையிலும் அனுமதி பெறாமல், 'கொரோனா கொல்லி' மைசூர்பாக் தயார் செய்தது தெரியவந்தது.பேக்கரி மற்றும் ஸ்வீட் கடையான அங்கு, விற்பனைக்கு இருந்த மூலிகை மைசூர்பாக், 120 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய். கடைக்கு, 'சீல்' வைத்த அதிகாரிகள், விற்பனை உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.டாக்டர் தமிழ்செல்வன் கூறுகையில், ''தவறான விளம்பரம் செய்து, மைசூர்பாக் விற்றதாக கடை உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின், 53 மற்றும் 61ம் பிரிவுகளில், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடையில் எந்தவித தயாரிப்பும், விற்பனையும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.ஆய்வில் பங்கேற்ற சித்த மருத்துவ அலுவலர்கள், 'கொரோனா கொல்லி' மைசூர்பாக் தயாரிக்க பயன்படுத்தியதாக கூறப்பட்ட மூலப்பொருட்களை பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளனர். கிலோ800 ரூபாய்!பச்சை நிறத்தில் இருந்த கொரோனா கொல்லி மைசூர்பாக், 50 கிராம் பாக்கெட், 50ரூபாய் என்று விற்றுள்ளனர். ஒரு கிலோ வாங்கினால், 800 ரூபாய்க்கு விற்றுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இந்த விற்பனை நடந்துள்ளது. விற்பனையை அதிகரிக்கும் விதமாக, கடை உரிமையாளர், நோட்டீஸ் அச்சிட்டும் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து, கொரோனா அச்சத்தில் இருக்கும் ஏராளமானோர் வாங்கிச் சென்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஜூலை-202008:38:01 IST Report Abuse
Sampath Kumar லஞ்சம் இது கொரோனவை வீட பலமடங்கு பெருகி உள்ளது அதுக்கு என்ன செய்ய ?? ஒன்னும் பண்ண முடியாது ??/
Rate this:
Cancel
09-ஜூலை-202015:07:20 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) இந்த நேரத்திலும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை என்னவென்று சொல்வது ???
Rate this:
Cancel
Krishna R -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூலை-202012:12:28 IST Report Abuse
Krishna R Hand sanitizer and other related companies only should use corona name for raising their sales.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X