மதுரைவிமான ஓடுபாதை விரிவாக்க ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தாமதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:01

மதுரை, -மதுரையில் ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தள்ளிபோவதால் விமான ஓடுபாதை விரிவாக்க பணிகள் கிடப்பில் உள்ளன.மதுரையில் சர்வதேச விமானங்கள் இயங்க ஏதுவாக ரூ.145 கோடியில் டெர்மினல் 2011ல் அமைக்கப்பட்டது. தற்போது கொழும்பு, மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயங்குகின்றன. கொரோனாவால் அந்த விமானங்களும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏர்பஸ் போன்ற பெரிய ரக விமானங்கள் இயங்க ஏதுவாக தற்போது 7500 அடிநீளமுள்ள விமான ஓடுபாதையை 12 ஆயிரம் அடியாக நீட்டிக்க விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 2010ல் பாப்பனோடை, பரம்புபட்டி, அயன்பாப்பாகுடி, சின்னஉடைப்பு, ராமன்குளம் பகுதியில் உள்ளவர்களின் 620க்கும் மேற்பட்ட ஏக்கர் கையகப்படுத்தப்பட்டன. இவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.50 கோடி மட்டுமே நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்கும் பணி தேர்தல், நீதிமன்ற வழக்கு தற்போது ஊரடங்கால் தள்ளிபோகிறது.மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சிலர் இழப்பீட்டை உயர்த்தி வழங்ககோரி பாதி தொகையை பெற்று கொண்டு நீதிமன்றங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் இழப்பீடு வழங்கும் பணிகள் தாமதமாகின்றன'' என்றார்.இழப்பீடு வழங்கி நிலங்களை கையகப்படுத்தி விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைத்தால் மட்டுமே ஓடுபாதை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே இழப்பீட்டை முழுமையாக விரைந்து வழங்கி நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundarajan Solai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-202015:44:54 IST Report Abuse
Sundarajan Solai அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு துபைலிருந்து சுந்தராஜன் சோலை எழுத்தும் செய்தி என்னவெனில் மதுரை விமானநிலையம் விரிவாக்கம் பற்றியது. நமது பக்கத்துக்கு மாநிலம் கேரளாவில் புதிய விமானவையாம் தொடங்க வென்றும் என்றால் பொது மக்கள் மற்றும் மாநில அரசும் உடனடியாக செய்து மத்திய விமான ஆணையத்திடம் கொடுத்து விடுவார்கள். ஆனால் நமது அரசு இது வரை எந்த முயற்சியும் செய்யவில்லை. இன்று வரை பூ காய்கறிகள் திருவனந்தபுரம் சென்றுதான் துபாய் வருகிறது. தற்சமயம் திருச்சி விமானநிலையம் மூலம் வருகிறது ஆனால் குளிரூட்டிய அரை சரியாக இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் மதுரை சுற்றி அதிக மக்கள் அரபு நாட்டிலும் மற்றும் ஐரோப்பிய நாட்டிலிம் இருக்கிறார்கள் அவர்கள் சென்னை அல்லது பெங்களூரு வழியாகத்தான் வரவேண்டிய நிலமை உள்ளது. மதுரை ஏர்போர்ட் நல்ல முறையில் கட்டிமுடுத்தும் உபயோகம் இல்லாத நிலைமை தான். அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு தங்களுக்கு ஆறு மாதங்கள் முன்பு அனுப்பிய இதுபோன்ற பதிவில் தாங்கள்தான் சம்பந்த பட்ட அலுவலகத்து எங்களது கருத்துக்களை சேர்க்கவும். மீண்டும் தயவுசெய்து தாங்கள்தான் முயற்சி செய்து சம்பந்த பட்ட நிர்வாகத்துக்கு நினைவு செய்யவும். மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X