வெறிச்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:17

காரைக்குடி:கல்வி நகரான காரைக்குடியில் விடுதி, தனியார் வீடுகளில் தங்கி படித்த மாணவர்களை நம்பி, 'மெஸ்' நடத்தி வந்த ஏராளமான குடும்பத்தார், ஊரடங்கால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.



காரைக்குடி அழகப்பா பல்கலை, கலை கல்லுாரி மற்றும் சிக்ரி ஆராய்ச்சி படிப்பு, தொழில்நுட்ப கல்லுாரி, ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு என எல்.கே.ஜி., முதல் மருத்துவம் தவிர்த்து ஆராய்ச்சி படிப்பு வரை காரைக்குடியை நம்பி படிக்கலாம். அந்தளவிற்கு கல்வி நகர் என்ற பெயரை காரைக்குடி கைப்பற்றியுள்ளது.



இதனால், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலம், நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்விக்காக இங்கு வருகின்றனர். இவர்கள் தனியார் லாட்ஜ், வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி, ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஓட்டல் உணவுவிரும்புவதில்லை.



இதன் காரணமாக வீடுகளில் நடக்கும் 'மெஸ்'களை நம்பியே முழு அளவில் உயர்கல்வியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லுாரி விடுதி கிடைக்காத நிலையில், தனியாரிடம் வாடகைக்கு தங்கி படிக்கின்றனர். இவர்களின் உணவு கூடமாக 'மெஸ்கள்' செயல்படுகின்றன. குறைந்த விலையில் தரமான உணவு, விடுதி, லாட்ஜ்களுக்கே வந்துவிடுவதால், மாணவர்கள் தடையின்றி 'மெஸ்' உணவுகளை சாப்பிடுகின்றனர். இவர்களை நம்பி காரைக்குடியில் ஏராளமான குடும்பத்தினர் வீடுகளில் மெஸ் நடத்தி வருகின்றனர். \



கடந்த மார்ச் 24 முதல் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதித்தது. பல்கலை, கல்லுாரிகள் காலவரையற்ற விடுமுறை அறிவித்ததால், மாணவர்கள் விடுதி, லாட்ஜ்களை காலிசெய்து சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடிப்பதால், மாணவர்கள், அரசு ஊழியர்களை நம்பி மெஸ் நடத்தியோரின் குடும்பங்கள் வருமானமின்றி தவிக்கின்றன.





இது குறித்து காரைக்குடி முனீஸ்வரன் கூறியதாவது, உயர்கல்வி, கோச்சிங் சென்டரில் படிக்கும் மாணவர்களை நம்பி, பாரிநகர், ராம்நகரில் ஏராளமான குடும்பத்தினர் மெஸ் நடத்தி வருகிறோம். மாணவர்களுக்கு அறுசுவை உணவளித்த, நாங்கள் உணவருந்த வருவாய் இன்றி தவிக்கிறோம், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X