| முகக்கவசம் அணிவதே பாதுகாப்பு :மக்களுக்கு போலீஸ் விழிப்புணர்வு Dinamalar
முகக்கவசம் அணிவதே பாதுகாப்பு :மக்களுக்கு போலீஸ் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:22

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுவதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், காந்தி சிலை சிக்னல் அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாப்புடன் இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கைகளில் 'சானிடைசர்' பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் கைகளை கழுவும் முறை குறித்து தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் கூறியதாவது:பொள்ளாச்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வர வேண்டாம். பயன்படுத்தக்கூடிய மொபைல்போன் மற்றும் பேனா உள்ளிட்டவை யாரிடமும் பயன்படுத்த கொடுக்க வேண்டாம். கடைகளுக்கு செல்லும் போது, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கைகளை கழுவ வேண்டும். அத்தியாவசியமின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முழு ஊரடங்கு நாட்களில் வெளியில் யாரும் வரக்கூடாது.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X