இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:24

கோவை:கோவையில், இன்று (வெள்ளிக்கிழமை) மருத்துவ முகாம் நடைபெறும் இடங்களை, மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன் விவரம்:வடக்கு மண்டலம்: தண்ணீர் பந்தல், கருப்பராயன் பாளையம், எம்.வி.கே., வீதி, ராஜரத்தினம் வீதி, தில்லை நகர், அண்ணா காலனி, ஸ்ரீவர்ஷா காலனி.தெற்கு மண்டலம்: செல்வ புரம் கிரீன் பார்க், வடக்கு ஹவுசிங் யூனிட், ராமச்செட்டிபாளையம் பள்ளி வீதி, ஸ்ரீராம் நகர், ஈச்சனாரி, சத்யா நகர்.மேற்கு மண்டலம்: லாலி ரோடு, சண்முகா நகர், வேலாண்டிபாளையம் அண்ணா நகர், அசோக் நகர், நேதாஜி வீதி, பொம்மணாம்பாளையம் தெற்கு, கூத்தாண்டவர் கோவில் வீதி.கிழக்கு மண்டலம்: ரங்கநாதபுரம், கதிரவன் நகர், பாரதிபுரம், வரதராஜபுரம் என்.ஜி.ஆர்., காலனி, கருணாநிதி நகர்.மத்திய மண்டலம்: சண்முகா நகர், உப்பார வீதி, நியூ சிட்டரம்பலம் லேஅவுட், பி.எம்.சாமி காலனி, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், காந்திபுரம், 3, 4வது வீதி, பெரிய கடை வீதி ஆகிய இடங்களில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை, 10:00 மணி முதல், மருத்துவ முகாம் நடைபெறும்.தொடர் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள், சிகிச்சை பெறலாம். 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருதய நோயாளிகள், நுரையீரல், சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் தொற்று அறிகுறி உள்ளவர்கள் அனைவருக்கும், பரிசோதனை செய்யப்படுகிறது என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.5,101 பேருக்கு 'செக்கப்'மாநகராட்சிக்கு உட்பட்ட, 32 இடங்கள் மற்றும், 5 சிறப்பு முகாம்களில் நேற்று ஒரே நாளில், 5,101 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 346 பேருக்கு சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.மதுக்கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மற்றவர்களுக்கு மாநகராட்சி பரிசோதனையை துவக்கியுள்ளது. 38வது வார்டு, பாரதி பூங்கா பகுதியில், நேற்று நடத்திய சிறப்பு முகாமில், 150 பேரிடம் சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அவர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் மதிப்புள்ள நோய் தடுப்பு சக்தி 'கிட்' வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X