சிறுவாணியில் நீர் வெளியேற்றமா? அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:26

கோவை; சிறுவாணி அணையில் நீர் இருப்பு நிலவரத்தை, கோவை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழு நேற்று, நேரில் சென்று பார்வையிட்டு வந்தது.சமீபத்தில் பெய்த மழையால், நீர் மட்டம், 7 அடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த இரு நாட்களாக மழைப்பொழிவு இல்லாவிட்டால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆறுகளில், நீர் வரத்து காணப்படுகிறது.விலங்கினங்கள் தாகம் தணிப்பதற்காக, அணையில் இருந்து, வினாடிக்கு, 50 கனஅடி தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். சில நேரங்களில், அதிக தண்ணீரை, கேரள அதிகாரிகள் திறந்து விடுகின்றனர்.அதனால், அணையில் நீர் இருப்பு நிலவரம் அறிய, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்லமுத்து, ஆலோசகர் சம்பத்குமார், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார், உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், நேற்று அணை பகுதிக்கு சென்றனர். 'கொரோனா' பரவல் நேரத்தில் எதற்கு வந்தீர்கள் என்கிற ரீதியில், சோதனை சாவடியை கடந்து செல்ல, கேரள போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.கோவை மக்களின் நீராதாரமான பிரச்னை, கண்டிப்பாக செல்ல வேண்டும் என, அதிகாரிகள் கூறிய பிறகே, அனுமதிக்கப்பட்டனர்.நீருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர், அருவிகளில் நீர் வரத்து, அணையில் இருந்து வினாடிக்கு எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்பதை பார்த்து உறுதி செய்தனர். ஆனால், அணைக்கு கீழ் பகுதிக்கு இறங்கிச் சென்று, தண்ணீர் வெளியேற்றும் பகுதிக்குச் செல்ல விடாமல், கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X