மகளிர் குழுக்களிடம் வட்டி கேட்டு தொந்தரவு செய்தால் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:29

சிவகங்கை:''மகளிர் குழுக்களிடம் வழங்கிய கடனுக்கான வட்டியை கட்டக்கோரி அவர்களை தொந்தரவு செய்யும் நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சிவகங்கை எஸ்.பி., (பொறுப்பு) வருண்குமார் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இக்கால கட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு வட்டி வசூலிக்க கூடாது என தெரிவித்துள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கிற்கு முன் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கிய வங்கி, நிதி நிறுவனங்கள் வட்டி வசூல் செய்வதில் கட்டாயம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.



\குறிப்பாக மகளிர் வீடுகளுக்கு சென்று வட்டி கேட்டு மிரட்டுவதாக புகார் வருகிறது. இது போன்று அரசின் உத்தரவை மீறி, மகளிர் குழுக்களிடம் வட்டி கேட்டு மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற நிறுவனங்கள் குறித்து எஸ்.பி.,யின் அலைபேசி எண் 94899 19722-க்கு புகார் தெரிவிக்கலாம், என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X