பரமக்குடி வேந்தோணி கண்மாயில் செம்மண் கடத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
23:21

பரமக்குடி:பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வேந்தோணி கண்மாயில், அரசுநர்சரி கார்டன் அமைக்க செம்மண் எடுக்க அனுமதி பெற்றதின் பேரில்,தொடர்ந்து மண்ணை கடத்தியதாக இளைஞர்கள் சிலர் வாகனங்களைசிறை பிடித்தனர்.



பரமக்குடி அருகே மேலாய்குடி ரோட்டையொட்டி வேந்தோணி கண்மாய் உள்ளது. ஐ.டி.ஐ., பின்புறம் மாவட்டகலெக்டரால் தொடங்கி வைக்கப்பட்ட, நர்சரி கார்டனுக்கு இந்த கண்மாயிலிருந்து தேவையானமணலை அள்ள ஒன்றிய அதிகாரிகள், கலெக்டர் அலுவலகத்தில் அனுமதிகேட்டுள்ளனர்.



நேற்று முன்தினம் தொடங்கி மணல் அள்ளும் பணி நடக்கிறது.இங்கு அள்ளப்பட்ட செம்மண் அரசு கார்டனுக்கு செல்லாமல் 30 க்கும் மேற்பட்ட லோடுகளை தனியாரிடம் விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. நேற்று காலை கிராம இளைஞர்கள் சிலர் கூடி கண்மாயில் இருந்த இயந்திரம் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளைசிறை பிடித்தனர். அங்கு வந்த எமனேஸ்வரம் எஸ்.ஐ., சரவணன், ஆர்.ஐ., குமரன், துணை பி.டி.ஓ., ஜெயராமன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து இளைஞர்கள்முறையான ஆர்டர் இல்லாமல் டிப்பர் லாரிகளில் 30 க்கும் மேற்பட்ட லோடுமணல் அள்ளி தலா ரூ. 5 ஆயிரம் வரை விற்றுள்ளனர்.மணல் கடத்தல் குறித்து விசாரணை நடத்த வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து3 வாகனங்களும் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேங்கிடகிருஷ்ணன் கூறியதாவது:பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேந்தோணி கண்மாயில் இருந்து நர்சரி கார்டன் பணிக்காக 8 லோடு மணல் அள்ள அனுமதி கேட்டனர். முறைகேடுநடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X