கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
23:24

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கடைகளில் வியாபார நேரத்தினை திடீரென குறைத்து அறிவித்ததால் உணவகங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வீணாகியதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றை தடுக்க கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் கடைகளின் வியாபார நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர். இதன்படி பேரூராட்சியில் பிற்பகல் 2 மணி வரையிலும், நகராட்சிகளில் மாலை 6 மணி வரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.



இந்த உத்தரவு குறித்து விக்கிரவாண்டி வியாபாரிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்காததால் ஓட்டல்களில் வழக்கமான வியாபாரத்திற்கு பரோட்டா, சப்பாத்தி, பிரியாணி போன்றவைகள் தயாரித்து வைத்திருந்தனர்.நேற்று காலை திடீரென பேரூராட்சி மற்றும் காவல் துறையினர் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என அறிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் செயல் அலுவலர் மற்றும் காவல் துறையினரிடமும் வர்த்தகர் சங்கத்தினர் வியாபார நேரத்தை அதிகரித்து தரவேண்டும், திடீரென அறிவித்ததால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.



பொதுமக்களும் ஏமாற்றம் அடைவார்கள் என கூறினர்.மருந்து கடையை தவிர அனைத்து கடைகளும், 2 மணிவரையும், நேற்று ஒரு நாள் ஓட்டல்கள் மட்டும் 3 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கினர்.இதனால் ஓட்டங்களில் தயார் செய்திருந்த உணவுகள் வீணாகியது.விழுப்புரம் நகரில் நேரம் குறைப்பு தகவல் முறையாக அறிவித்ததால் நேற்று இரவு 8:00 மணி வரையிலும், இன்று மாலை 6:00 மணிவரை மட்டுமே திறக்கவேண்டும் என அறிவித்ததால் யாரும் பாதிக்கப்படவில்லை.விக்கிரவாண்டி தாலுகாவின் தலைமை இடமாக உள்ளதால் வியாபார நேரத்தை அதிகரிக்கவேண்டும் என வியாபாரிகள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X