| நிதி நிறுவனம் பெயரில் மோசடி Dinamalar
நிதி நிறுவனம் பெயரில் மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
23:26

ராமநாதபுரம்:முதுகுளத்துார் தாலுகா கொழுந்துறை கிராமத்தை சேர்ந்தவர் காதர்பாட்ஷா. இவர் பரமக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மாதந்தோறும் பணம் செலுத்தினால் 5 ஆண்டில் கட்டிய தொகையை இரட்டிப்பு செய்து வழங்குவதாக மஞ்சூர் மக்களிடம் கூறினார்.



ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர். கட்டிய பணத்திற்கு ரசீது கொடுத்தார். 2013-- 2018 வரை ரூ.16 லட்சம் பெற்றவர் ஐந்து ஆண்டு கழிந்த பின்இரட்டிப்பு பணத்தை கொடுக்கவில்லை. கட்டிய பணத்தையும் தரவில்லை.மஞ்சூர் காமராஜ் புகாரில் காதர்பாட்ஷா மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரித்தா வழக்கு பதிவு செய்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X