| மாற்றுப்பாதையில் தடுமாற்றம் :குழிகளால் ஓட்டுனர்கள் அச்சம் Dinamalar
மாற்றுப்பாதையில் தடுமாற்றம் :குழிகளால் ஓட்டுனர்கள் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
23:29

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரயில்வே மேம்பால பணிக்காக, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட மாற்றுப்பாதை மோசமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. ஆள் இறங்கும் குழிகள் அமைத்தல், குழாய் பதிப்பு, கழிவுநீர் உந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.நகரப்பகுதியில் உள்ள ரோடுகளில், குழாய் பதிப்பதற்காக தோண்டப்படுவதால், குண்டும், குழியுமாக விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.நகராட்சி அலுவலகம் அருகே, புதியதாக போடப்பட்ட ரோட்டை, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டினர். நகராட்சி அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்ததால், பணி நிறுத்தப்பட்டதுடன், அனுமதியின்றி ரோடு தோண்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.அதையடுத்து, அந்த இடத்தில் பெயரளவுக்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, நகராட்சி அலுவலகம் அருகே, ரோடு வளைவில், மெகா சைஸ் குழி உருவாகி உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டுனர்கள் குழியில் விழாமல் இருக்க, தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. கவனமின்றி வாகன ஓட்டுனர்கள் வந்தால் விபத்துக்குள்ளாகும் நிலை நீடிக்கிறது.தற்போது, மாற்றுப்பாதையாக உள்ள மார்க்கெட் ரோடு, மீன்கரை ரோடு, ஜமீன் ஊத்துக்குளி வழித்தடத்தில், மார்க்கெட் ரோடு - மீன்கரை ரோடு சந்திப்பு பகுதி உருக்குலைந்துள்ளது. கனரக வாகனங்கள் அடிக்கடி குழியில் சிக்கிக்கொள்கின்றன.திட்டமிடல் இல்லாமல், அனைத்து ரோடுகளிலும் பணி மேற்கொள்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்களும் சிரமப்படுகின்றனர்.எனவே, ரோடுகளில் உள்ள பெரும் குழிகளை சீரமைக்கவும்; மார்க்கெட் ரோட்டில் பணிகளை வேகப்படுத்தி ரோட்டை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X