| பட்டா மாறுதல் செய்ய இழுத்தடிப்பு :அலைமோதும் நில உரிமையாளர்கள் Dinamalar
பட்டா மாறுதல் செய்ய இழுத்தடிப்பு :அலைமோதும் நில உரிமையாளர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
23:36

கிணத்துக்கடவு:பத்திரப்பதிவு முடிந்த பின், 'ஆன்லைன்' வாயிலாக பட்டா மாறுதல் செய்யாமல், வருவாய்துறையினர் இழுத்தடிப்பு செய்வதால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும்போது, பட்டா மாறுதலுக்காக, 40 ரூபாய் உட்பிரிவு கட்டணமாக வசூல்செய்யப்படுகிறது.பத்திரப்பதிவு முடிந்த பின், 'ஆன்லைன்' வாயிலாக பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து, வருவாய்துறைக்கு விபரங்கள் சென்று விடுகிறது.இதற்கான குறுஞ்செய்தி, பத்திரம் பதிவு செய்தவரின் மொபைல்போனுக்கு அனுப்பப்படுகிறது. இதனை தொடர்ந்து, பட்டா மாறுதல் செய்து, சிட்டாவில் பெயர் சேர்க்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், பட்டா மாறுதல் செய்யாமல்,வருவாய்துறையினர் இழுத்தடிப்பு செய்கின்றனர்.வருவாய்துறையிடம் அணுகும்போது, மீண்டும் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்து, 40 ரூபாய் கட்டணம் செலுத்திய பின், கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து விண்ணப்பம் செய்யப்பட்ட விபரத்தை தெரிவித்தால் மட்டுமே, பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ஆன்லைனில் பதிவு செய்தவுடன், பட்டா மாறுதலுக்கு வருவாய்துறைக்கு வரும் விபரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால், மக்கள் அலைய வேண்டிய சூழ்நிலை இருக்காது.இதற்கு, தாசில்தார் உரிய நடவடிக்கை எடுத்து, பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X