கண்ட இடத்தில் கிடக்கிறது பி.பி.இ., உடை: கொரோனா வைரஸ் பரவும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
00:29

கோவை:கோவையில், கொரோனா நோயாளிகளை, அழைத்துச் செல்லவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும், பாதுகாப்பு கவச உடைகளை முறையாக அப்புறப்படுத்தாததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள் முதல் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரை, நோய் தொற்று பரவாமல் இருக்க, 'பர்சனல் புரொடெக்டீவ் எக்யூப்மென்ட் (பி.பி.இ.,)' எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிகின்றனர்.இந்த உடையில், உடல் முழுவதும் மறைப்பதற்கு கவச உடை, தலை மற்றும் கால்களில் அணிவதற்கு பிரத்யேக கவர், முகத்தில் அணிவதற்கு 'என்.95 மாஸ்க்' (எப்.எப்.2 குவாலிட்டி), கண்களை பாதுகாக்க 'கார்கில்ஸ்' கண்ணாடி உள்ளிட்டவை இருக்கும்.உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகளை, கிருமிநாசினி தெளித்து முறையாக அப்புறப்படுத்தாவிட்டால், பாதிப்பை உண்டாக்கும்.கோவையில் இந்த பாதுகாப்பு கவச உடைகளை, முறையாக அப்புறப்படுத்தாததால், கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கவரில் திணித்து துாக்கி வீசு!கவுண்டம்பாளையம், அசோக் நகர் பகுதியில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வதற்காக, மருத்துவமனை ஊழியர்கள் வந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட நபரை வேனில் ஏற்றி விட்டு, பின்னர் அவரின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்தனர். அதன் பின்னர், கிளம்பும்போது, கவச உடைகளை அணிந்திருந்த ஊழியர்கள், அதனை கழற்றி ஒரு கவரில் திணித்து, சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் உடனே அந்த காட்சியை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர்.மற்றொரு சம்பவம்கொடிசியாவில், 400 படுக்கைகள் கொண்ட, பிரத்யேக சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா நோயாளி ஒருவர், ஆம்புலன்சில் அழைத்து வரப்படுகிறார்.உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடை, அருகில் உள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, தெருநாய் அதனை இழுத்துக் கொண்டு செல்கிறது. இதுதொடர்பான, காட்சிகள் வலைதளங்களில் வைரலாகியுள்ளது.ஊழியர்களின் இது போன்ற அலட்சிய போக்கால், கொரோனா தொற்று மேலும் பரவி விடுமோ என மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.'கட்டாயம் விசாரிக்கிறேன்'கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''ஒருவேளை தனியாரை சேர்ந்த யாராவது, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். வீடுகளுக்கு மருந்து தெளிப்பவர்களுக்கும், பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரெனும் செய்திருக்க வாய்ப்புள்ளது. இது சம்பந்தமாக கட்டாயம் விசாரிக்கிறேன். கொடிசியாவில் நடந்த சம்பவத்துக்கு காரணம், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். தகவல் அறிந்ததும் உடனே சம்பந்தப்பட்ட டிரைவரை அழைத்து விசாரணை நடத்தி, கண்டித்து விட்டோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X