உதவித்தொகை வழங்க சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
00:31

உதவித்தொகை வழங்க சிக்கல்எட்டாம் வகுப்பு படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவருக்கு, திறனறி தேர்வு அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில், விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு வழங்கவில்லை. எனவே, மாணவரின் வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாததால், சரிபார்த்து நடைமுறையில் வைத்திருக்குமாறு மாணவர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.விவசாயிகள் போராட்டம்உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டுமென, பொங்குபாளையத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்து, தலைமை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் விஜயகுமார், தமிழக விவசாயிகள் சங்க பாதுகாப்பு மாநில தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.தொட்டி கட்டும் பிரச்னைஅவிநாசி அருகே கருவலுார் ஊராட்சி, கருப்பராயன் கோவில் பகுதியில், மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு, பணி துவங்கியது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'திட்டமிட்டபடி தொட்டி கட்ட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, மற்றொரு தரப்பினர், மறியல் செய்ய முற்பட்டனர். பேச்சு மூலம் பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தி, போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.விஷம் குடித்தவர் பலிதிருப்பூர், புதுக்காட்டை சேர்ந்தவர் லோகநாதன், 55. பனியன் தொழிலாளி. தம்பதியருக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, உணவில் விஷம் கலந்து குடித்து விட்டு, புதுார் பிரிவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மயங்கி கிடந்தார். அருகிலிருந்தோர், அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கிணற்றில் விழுந்து தற்கொலைதிருப்பூர், போயம்பாளையம் துண்டுக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, 58. இவரின் இரு மனைவியரும் ஐந்து ஆண்டுக்கு முன் இறந்தனர். இதனால், துக்கத்தில் வாழ்ந்து வந்தார். நேற்று மன விரக்தியில் காணப்பட்ட அவர், தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து, அனுப்பர்பாளையம் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.போலீஸ் ஸ்டேஷன் 'பளிச்'அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையம் ஆகியவை, போலீசாரின், 24 மணி நேர பயன்பாட்டில் இருந்து வருகிறது. புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற அருள், முயற்சியால், ஸ்டேஷன் மற்றும் புறக்காவல் நிலையம் ஆகியவை பராமரிக்கப்பட்டு, பொலிவூட்டப்பட்டுள்ளது. ஸ்டேஷன் முழுக்க வர்ணம் தீட்டப்பட்டு, மரக்கன்று, பூச்செடிகள் நடப்பட்டுள்ளது.உயரும் தக்காளி விலைதிருப்பூர், தெற்கு உழவர் சந்தையில், தக்காளி கிலோ, 43 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஊரடங்கு துவக்கத்தில் கிலோ, 12 ரூபாயாக இருந்த தக்காளி விலை இரு மாதங்களாக உயரவில்லை. ஆனால், இம்மாத துவக்கத்தில் கிலோ, 43 ரூபாயாக உயர்ந்தது. பரும மழை பரவலாக பெய்வதால், தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாகவும், அடுத்த இரு வாரங்களுக்கு இதே நிலை தொடரும், என உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.பருத்தி ஏலம் சுறுசுறுப்புமூலனுார் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 748 குவின்டால், பருத்தி வந்தது. இதில், முதல் ரகம், குவின்டால் 5,500, இரண்டாம் ரகம், 3,800 ரூபாய்க்கு விற்பனையானது. 330 விவசாயிகள், 20 வியாபாரிகள் பங்கேற்றதில், மொத்தம், 55.23 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது. சுகாதாரத்துறை சார்பில் விற்பனை கூடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.விவசாயிகள் ஆர்ப்பாட்டம்உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு, தற்போதைய சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, மூலனுார் அருகே மாம்பாடி ஊராட்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் கொள்கை பரப்பு செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். கோவை மாவட்டத்தை பின்பற்றி, திருப்பூரிலும் இழப்பீடு நிர்ணயித்து வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோஷமிட்டனர்.வேன் மோதி செக்யூரிட்டி பலிவெள்ளகோவில் அருகே நாகம நாயக்கன் பட்டி வெங்கமேட்டை சேர்ந்தவர் சுப்பராயலு, 70. மில் ஒன்றில், செக்யூரிட்டியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு, செங்காளிபாளையத்தில் உள்ள நுால் மில்லுக்கு, சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஓலப்பாளையம், குத்தாங்கல்காட்டுப் பிரிவு அருகே எதிரே வந்த போர்வெல் ரெக்கவரி வேன், சைக்கிள் மீது மோதியது. இதில், அதேயிடத்தில் அவர் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X