சூலூர்:சூலூரில் விதிகளை மீறி, கூட்டம் அதிகம் காணப்பட்ட, டீக்கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் பூட்டு போட்டது.சூலூர் பேரூராட்சியில், ஐந்து ரூபாய் டீக்கடைகள் பல உள்ளன. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், நேற்று கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது, சூலூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கடை, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டீக்கடைகளில், விதிகளை மீறி மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததை கண்டார். இதையடுத்து, அம்மூன்று கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.