கோவை:குடிபோதையில் தீ வைத்ததால், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்தார். கணவன் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை ராமநாதபுரம் அம்மன்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கராஜ், 56. இவரது மனைவி கமலா, 51. இவர்களுடன் தங்கராஜின் மாமியார் காளியம்மாள், 70 வசித்து வருகிறார். கடந்த, 8ம் தேதி குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கெரசின் ஊற்றி தீ வைத்தார்.காப்பாற்ற முயன்ற காளியம்மாள் மீதும், கெரசின் ஊற்றி தீ வைத்தார். கோவை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். கமலா நேற்று உயிரிழந்தார். ராமநாதபுரம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, தங்கராஜை சிறையில் அடைத்தனர்.