| குழந்தைகளுடன் பட்டினி கிடக்கிறோம்: கண்ணீர் விடுகின்றனர் காலனி மக்கள் Dinamalar
குழந்தைகளுடன் பட்டினி கிடக்கிறோம்: கண்ணீர் விடுகின்றனர் காலனி மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
00:51

அன்னூர்;'சீல் வைக்கப்பட்ட பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை' என, மக்கள் கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.காட்டம்பட்டி ஊராட்சி, முதலிபாளையம் காலனியில், கடந்த வாரம் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது மனைவிக்கு தொற்று உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த, 78 பேருக்கு பரிசோதனை செய்ததில், 8 பேருக்கு தொற்று உறுதியானது.இதையடுத்து, காலனியின், மூன்று வாசல்களும், அடைக்கப்பட்டுள்ளன. உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம், போலீசார் கண்காணிக்கின்றனர்.காலனி மக்கள் சிலர் நேற்று கூறுகையில்,'எங்கள் காலனி முழுமையாக அடைக்கப்பட்டு ஏழு நாட்கள் ஆகிவிட்டது. யாரும் வேலைக்கு செல்வதில்லை. இங்கு பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்கள். வருமானம் இல்லை. உணவுக்கு வழியில்லை.சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் பலர் இருக்கின்றனர். அரிசி, பருப்பு என எந்த நிவாரணமும் தரவில்லை. பணமும் தரவில்லை' என கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்,ஊராட்சி தலைவர் காயத்ரி கூறுகையில், "காலனிக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு, இலவசமாக பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்," என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X