| நிலத்தை அளந்து காட்ட பழங்குடியினர் கோரிக்கை  Dinamalar
நிலத்தை அளந்து காட்ட பழங்குடியினர் கோரிக்கை 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
00:57

கோவை:தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளந்து, அளவீடுகள் குறித்து தர கோரி, மதுக்கரை வட்டம் திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பழங்குடியினர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:திருமலையாம்பாளையம் பகுதியில், 59 வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு பழங்குடியினருக்கு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட சிலருக்கு விவசாய நிலங்களும் வழங்கப்பட்டன. பேரூராட்சி தரப்பில் எவ்வித அளவீடும் செய்யாமல், எங்கள் நிலத்திற்குள் தார்சாலைகள் அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். மின்வாரியம் எவ்வித அனுமதியும் பெறாமல், கம்பங்களை நட்டுச்சென்றுள்ளனர். பிற பகுதிகளில் சிமென்ட் சாலைகள் அமைத்து விட்டு, எங்கள் கிராம தெருக்களில் மட்டும், தார்சாலைகள் அமைக்கவுள்ளனர்.எங்கள் கிராமத்தில் உள்ள, நான்கு தெருக்களையும் அளந்து எல்லைகளை காண்பித்து, அளவீடுகள் குறிப்பிட்டு தரவேண்டும். இருக்கும் சிறு நிலங்களை பறித்துக்கொண்டால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X