பதவி உயர்வு பெற்ற போலீசாருக்கு உரிய பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
01:01

புதுச்சேரி : இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு உரிய பணிகளை வழங்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.



இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் சமீபத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால், பதவி உயர்வுக்கான பணி பொறுப்புகள் இதுவரை வழங்கப் படவில்லை. பதவிக்குரிய பொறுப்புகள் வழங்காமல், பெயரளவில் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வினால், ஒரே ஸ்டேஷனில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே, புதிதாக இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்தவர்களுக்கு, அரசு உடனடியாக உரிய பணி பொறுப்புகளை வழங்க வேண்டும்.



கொரோனா தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள், பொது சுகாதாரத்துறையினர், போலீசாருக்கு, அவர்களின் சேவையை அரசு ஊக்கப்படுத்தும் வகையில், சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.போலீஸ் துறையில் சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, அந்த பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசில், 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு, துறை ரீதியாக அளிக்கப்பட வேண்டிய பதவி உயர்வை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X