| 50 சதவீத குளங்கள் விடுபட்டு விட்டன ; விவசாயிகள் சரமாரி புகார் Dinamalar
50 சதவீத குளங்கள் விடுபட்டு விட்டன ; விவசாயிகள் சரமாரி புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
01:03

அன்னூர்:குப்பேபாளையம் ஊராட்சியில், 50 சதவீத குட்டைகள் விடுபட்டுள்ளன' என பூமி பூஜையில் விவசாயிகள், சரமாரியாக புகார் தெரிவித்தனர்.கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 32 பொதுப்பணித்துறை குளங்கள், 48 ஒன்றிய குளங்கள், 970 குட்டைகளில், 1.5 டி.எம்.சி., நீர் நிரப்பும் அவினாசி அத்திக்கடவு திட்டம் 1,652 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது.இதில் குப்பேபாளையம் ஊராட்சி, செங்காளிபாளையத்தில், நேற்று குழி தோண்டி, குழாய் பதிக்கும் பணியை, ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி துவக்கி வைத்தார்.விழாவில் குப்பேபாளையம் விவசாயிகள் கூறுகையில்,' அவிநாசி, அத்திக்கடவு திட்டத்திற்கான போராட்டத்தில், இந்த ஊராட்சியில் இருந்து தான் அதிக விவசாயிகள் பங்கேற்றனர். ஆனால் இந்த ஊராட்சியில் 15 குட்டைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. முக்கியமான 14 குட்டைகள் விடுபட்டுள்ளன. உடனடியாக விடுபட்ட குட்டைகளை, இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என்றனர்.அதிகாரிகள் பதிலளிக்கையில், 'அத்திக்கடவு இரண்டாம் திட்டம் நிறைவேற்றப்படும். அதில் விடுபட்ட குளங்கள் சேர்க்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது' என்றனர்.விழாவில், ஊராட்சித் தலைவர் சாந்தி அருண், அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், கணேசன், ஒன்றிய கவுன்சிலர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X