தனவேலு எம்.எல்.ஏ., பதவி பறிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
01:10

புதுச்சேரி : எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தனவேலுவை நீககி, சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.



பாகூர் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தனவேலு. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதும், அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதுடன், மக்களை திரட்டி போராட்டமும் நடத்தினார். மேலும், கவர்னரை சந்தித்து ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதையடுத்து, காங்., கட்சியில் இருந்து தனவேலுவை சஸ்பெண்ட் செய்து, அப்போது மாநில காங்., தலைவராக இருந்த நமச்சிவாயம் நடவடிக்கை எடுத்தார்.



அவரிடம் இருந்து பாப்ஸ்கோ வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ., பதவியை பறிக்க வேண்டி, அரசு கொறடா அனந்தராமன் காங்., எம்.எல்.ஏ.,க்களுடன் சென்று சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் மனு அளித்தார்.அரசு கொறடா அளித்த மனுவின் அடிப்படையில், 'எம்.எல்.ஏ., பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது' என விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் முன் பலமுறை ஆஜரான தனவேலு, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டு வந்தார்.



இறுதி கட்டமாக கடந்த மாதம் 3ம் தேதி சபாநாயகர் முன் ஆஜராகி விளக்கம் அளித்த அவர், சாட்சிகளிடம் தனது வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துவிட்டு புறப்பட்டார். தனவேலு அளித்த விளக்கத்தை தீவிரமாக பரிசீலித்த சபாநாயகர் சிவக்கொழுந்து, அவரை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து நேற்று மாலை உத்தரவிட்டார். இதுதொடர்பான முறைப்படியான கடிதம் தனவேலுக்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



ஆட்சிக்கு ஆபத்தா? புதுச்சேரி சட்டசபையில் காங்., கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டணி கட்சியான தி.மு.க., விற்கு 3 எம்.எல்.ஏ., க்களும் உள்ளனர். மேலும் மாகியை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் காங்., ஆட்சிக்கு ஆதரவளித்து வருகிறார். மொத்தம் 19 எம்.எல்.ஏ., க்கள் ஆதரவு காங்., ஆட்சிக்கு இருக்கிறது.இந்த நிலையில் காங்., எம்.எல்.ஏ., தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், சட்டசபையில் காங்., மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களின் பலம் 18ஆக குறைந்துள்ளது.



பிரதான எதிர்கட்சிகளான என்.ஆர்.காங்., கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க., விற்கு 4 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். மேலும் மற்றொரு கூட்டணி கட்சியான பா.ஜ.,விற்கு 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.புதுச்சேரி சட்டசபையில் எதிர்கட்சிகளின் பலம் 15 ஆக உள்ளது. 30 எம்.எல்.ஏ., க்களை கொண்ட புதுச்சேரி சட்டசபையில் பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏ.,க்கள் பலம் தேவை.காங்., எம்.எல்.ஏ., தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், காங்., ஆட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எனவே தற்போது காங்., ஆட்சிக்கு ஆபத்து இல்லை.



பாக்ஸ் -1--பாகூர் தொகுதி காலி பாகூர் எம்.எல்.ஏ., தனவேலுவை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து, சட்டசபை செயலர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பாகூர் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் ' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் - 2ரகசிய ஆலோசனை தனவேலு மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனையில் சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று மாலையில் ஈடுபட்டார். தகவல் எந்தவிதத்தில் கசிந்து விடக் கூடாது என, சபாநாயகர் அலுவலக வட்டாரம் உஷாராக இருந்தது. இதனால், சபாநாயகர் அலுவலக கதவுகள் நேற்று மாலை திடீரென மூடப்பட்டது. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X