தேவை! தனிமைப்படுத்தப்பட்டோர் முகாம்கள் மீது கவனம்...கூட்டமாக தங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
01:19

விருத்தாசலம் : கடலுார் மாவட்ட தனிமை முகாம்களில் கொரோனா மாதிரி எடுத்தவர்கள் பலரும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. பாதித்தோர் எண்ணிக்கை 1500 ஐ கடந்தது. பலிஎண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வருவோரால் தொற்று அதிகரிப்பதால், அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புஉள்ளதால், அதை சமாளிக்க கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதுடன், தனிமைப்படுத்தப்பட்டோர் தங்குவதற்காக மையங்களையும் மாவட்ட நிர்வாகம் கூடுதலாக ஏற்பாடு செய்துள்ளது.



கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள அரசு கல்லுாரி மாணவர்கள் விடுதி, கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி விடுதி, குமராபுரத்தில் கிருஷ்ணா நர்சிங் ஹோம், பண்ருட்டி பனிக்கன்குப்பம் அண்ணா பொறியியல் கல்லுாரி விடுதி, சிதம்பரம் பல்கலைக் கழக விடுதி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தனியார் லாட்ஜ்களில் பணம் கொடுத்து தங்க விரும்புவோருக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாம்களில் இது வரையில் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலுாரில் கிருஷ்ணசாமி கல்லுாரி விடுதி, கடலுார் சி.கே.பொறியியல் கல்லுாரி விடுதி உள்ளிட்ட 5 மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.



கூட்டத்தால் நோய் அபாயம்இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உமிழ்நீர் மாதிரி எடுத்து, பாதிப்பு உறுதியான நபர்கள், சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பாதிக்கப்படாதவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றர். விடுதிகளில் தங்க வைக்கப்பட்டவர்கள், கூட்டமாக இருப்பதால், நோய் தொற்று உள்ளவர்கள் மூலமாக அவர்களுக்கு நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாதிரி எடுத்து தங்க வைப்பதில், அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.



தனித்தனியாக தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.மேலும், தனிமைப்படுத்தப் பட்டவர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள், குடிநீர், உணவு உள்ளிட்டவைகள் செய்ய வேண்டும். அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விருத்தாசலம் தனிமை முகாம் இரண்டு மாதமாக செயல்படும் நிலையில், அங்கு தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லை. ஓரிரு அறைகளில் மட்டுமே மின்விசிறி இருப்பதால், பரிசோதனை செய்த நபர்கள் அனைவரும், ஒரே அறையில் தங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதிப்பு இல்லாத நபர்களும், பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை என விடுதியில் தங்கியுள்ள நபர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறாத வகையில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X