| கோவை எஸ்.பி., உட்பட அதிகாரிகள் மாற்றம் Dinamalar
கோவை எஸ்.பி., உட்பட அதிகாரிகள் மாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
01:47

கோவை:கோவை ரூரல் எஸ்.பி., சுஜித்குமார் உட்பட மூன்று போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.தமிழக அரசு, 51 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நேற்றுபதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதில் கோவை ரூரல் எஸ்.பி.,யாக இருந்த சுஜித்குமார், மதுரை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.இவரது பணியிடத்துக்கு நாமக்கல் மாவட்ட எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த அருள்அரசு நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை மாநகர போலீஸ் சட்டம், ஒழுங்கு துணை கமிஷனராக பதவி வகித்து வந்த பாலாஜி சரவணனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரது பணியிடத்துக்கு மதுரை மாவட்ட குடிமைப்பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கோவையில், லஞ்ச ஒழிப்புதுறையில் டி.எஸ்.பி., யாக பணிபுரிந்தவர் . இதேபோல், கோவை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக பணிபுரிந்தசெல்வகுமார், திருப்பூர் மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இவரது பணியிடத்துக்கு திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏ.டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X