| கோவையில் 43 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 1,071; டிஸ்சார்ஜ் 320 Dinamalar
கோவையில் 43 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 1,071; டிஸ்சார்ஜ் 320
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
01:48

கோவை:கோவை மாவட்டத்தில் ஒரே நாளில், 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவர் உயிரிழந்தனர். மொத்த பாதிப்பு 1,071, இறப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை, 40க்கும் குறையாமல் இருந்து வருகிறது. கோவை, காந்திபுரம், 100 அடி ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும், ஊழியர்கள் இருவருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று மேலும் 13 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் தவிர, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், ஒரே நாளில் 43 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்தது. 320 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 744 பேர் இ.எஸ்.ஐ., - தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இருவர் பலிகோவை போத்தனுாரை சேர்ந்த 58 வயது பெண், கொரோனா பாதிப்புடன், கடந்த 8ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த, 61 வயது பெண் ஒருவரும் மூச்சுதிணறலுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X