| கோவை அருகே ரூ. 45 லட்சம் 'ஹவாலா' பணம் பறிமுதல் Dinamalar
கோவை அருகே ரூ. 45 லட்சம் 'ஹவாலா' பணம் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
01:51

பாலக்காடு:-கோவை அருகே, சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட ஹவாலா பணம், 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., சிவவிக்ரமன் உத்தரவின்படி, போதை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., மனோஜ் குமார், வாளையார் இன்ஸ்பெக்டர் லிபி ஆகியோர் தலைமையில் போலீசார், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, வாளையார் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். வாகனத்தில், 500 ரூபாய் 62 நோட்டு கட்டுகள், 2000 ரூபாய் ஏழு நோட்டுக் கட்டுகள் என, 45 லட்சம் ரூபாய், ஹவாலா பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.வாகனத்தில் இருந்த, கோவை ஈச்சனாரி கங்காநகர் மாச்சகவுண்டபாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் 46, கீரைத்தோட்டம் செம்பட்டி காலனியை சேர்ந்த பாலமுருக குருசுவாமி 40, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் பணம் கடத்தும் ஏஜன்ட்கள் என்றும், பணத்தை கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X