ரேஷனில் தரமான அரிசி வழங்க ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
02:20

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச அரிசி, பருப்பை தரமானதாக வழங்க நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்கள் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மத்திய அரசு ரேஷன் கார்டில் உள்ள நபருக்கு தலா 5 கிலோ இலவச அரிசி, கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு ஆகியவற்றை நவ., வரை வழங்க உத்தரவிட்டது. இதனால் 3 லட்சத்து 98 ஆயிரத்து 828 ரேஷன்கார்டுகள் மூலம் 12 லட்சத்து 16 ஆயிரத்து 20 உறுப்பினர்கள் பயன்பெறுவர்.



மத்திய அரசு அறிவித்த இலவச அரிசி தரமற்றும், கருப்பு அரிசியாக இருப்பதாக பா.ஜ., மகளிரணியினர் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசியை தரமானதாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.



பா.ஜ.,வினரின் கோரிக்கையை ஏற்று, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் உமாமகேஷ்வரி, அனைத்து அரிசி அரவை மில்களிலும் ஆய்வு செய்து, தரமான அரிசி வழங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.









நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டுகளுக்கு வழங்க மாதந்தோறும் 8 ஆயிரம் டன் அரிசியை, விவசாயிகளிடம் நெல்லாக பெற்று, அவற்றை அரவை மில்கள் மூலம் அரைத்து வழங்குவோம். இதில், ஆயிரம் டன் அரிசி மட்டுமே பஞ்சாபில் இருந்து (பைன் குவாலிட்டி) வரும். எஞ்சிய 7 ஆயிரம் டன் அரிசி, அரவை மில்லில் 2 முறை கொதிகலனில் கொதிக்க செய்து, பின் அரைத்து தருகின்றனர். இதனால், கருப்பு அரிசி அதிகம் வர வாய்ப்பு உண்டு. இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்னையின்றி தரமான அரிசி வழங்க, அரவை மில்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X