வரைபடத்தில் இருந்தே மாயமாகும் அபாயத்தில் பள்ளிக்கரணை பெரிய ஏரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
02:34



பள்ளிக்கரணை பெரிய ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி, பெரும்பகுதி மாயமாகி விட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, ராணுவத்தின் உதவியை, பொதுப்பணித் துறை எதிர்பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏரியை முழுமையாக மீட்டு, மழை நீர் சேகரிப்பு மையமாக மாற்ற, முதல்வர் உத்தர விடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பள்ளிக்கரணையில் உள்ள பெரிய ஏரி, 150 ஏக்கர் பரப்புடையதாக இருந்தது. இந்த ஏரியில் தேக்கப்படும் நீர், சுற்று வட்டார விவசாய நிலங்களின் பாசனம் மற்றும் மக்களின் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.சுருங்கி விட்டதுநகரமயமாக்கல் விளை வாக, இந்த ஏரியை ஒட்டியிருந்த விவசாய நிலங்கள் அனைத்தும், வீட்டு மனைகளாக உருமாறின.அரசியல்வாதிகள், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் நீர்த்தேக்க பகுதிகளை கூறு போட்டு விற்கத் துவங்கினர். குறைந்த விலைக்கு நிலம் கிடைத்ததால், பொதுமக்களும் அவற்றை போட்டி போட்டு வாங்கினர்.நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததால், ஒரு கட்டத்தில், ஏரியின் கரையை உடைத்தும், 'பிளாட்' போட்டு விற்பனை செய்தனர்.மின் வாரியமும், தடையின்றி மின் இணைப்பு வழங்கியது; ஊராட்சி நிர்வாகமும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், உடனுக்குடன் செய்து கொடுத்தது.இவற்றை எல்லாம் தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரிக்கும், தங்களுக்கும், எந்த தொடர்பும் இல்லாதது போல இருந்து, ஏரியை கபளீகரம் செய்ய உதவி செய்துள்ளனர்.ஒரு கட்டத்தில், 'நாங்களும் வேலை செய்கிறோம்' என, கணக்கு காட்ட, வீடுகளை காலி செய்யும்படி, அவ்வப்போது எச்சரிக்கை, 'நோட்டீஸ்' கொடுத்ததோடு சரி; நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.இதனால், 150 ஏக்கராக இருந்த ஏரி, 30 ஆண்டுகளில், வெறும், 5 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி விட்டது. இதே நிலை நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில், ஏரி இருந்த சுவடே தெரியாமல், வரைப்படத்தில் இருந்தே அழிந்து போகும் அபாயம் உள்ளது.அதே போல, மேடவாக்கம் பெரிய ஏரியில் இருந்து சித்தேரிக்கும், அங்கிருந்து பள்ளிக்கரணை பெரிய ஏரிக்கும், 40 அடி அகலத்திற்கு அதிகமான போக்கு கால்வாய் இருந்தது.உத்தரவுஏரியை ஆக்கிரமித்தவர்களே, அவற்றையும் ஆக்கிரமித்து விற்பனை செய்தனர். இதனால், ஏரியின் போக்கு கால்வாய் இருந்த சுவடே, தற்போது தெரியவில்லை.'நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்க, தலைமை செயலர் தலைமையில், சிறப்பு குழு அமைக்க வேண்டும். மாவட்ட அளவில், கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.'மாதம் ஒருமுறை, சிறப்பு குழுவினர், ஆலோசனை நடத்த வேண்டும். மாவட்ட குழுக்களின் நடவடிக்கைகளை, அப்போது ஆய்வு செய்ய வேண்டும்' என, கடந்தாண்டு மே மாதம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.எச்சரிக்கைமேலும், 'ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, போலீசார் ஒத்துழைக்கவில்லை என்றால், ராணுவத்தையும் அனுப்ப நேரிடும்' எனவும், எச்சரித்தது.ஆனாலும், இன்றள வில் பள்ளிக்கரணை ஏரியை மீட்க, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பள்ளிக்கரணை ஏரியை மீட்டு, நீரை முறையாக சேமித்தால், அப்பகுதி குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்யலாம்; நிலத்தடி நீர்மட்டத்தை யும் உயர்த்தலாம்.பழைய ஆவணங்கள் அடிப்படையில், போக்கு கால்வாய்களை முதலில் கண்டறிந்து, அவற்றையும் மீட்க வேண்டும்.முதல்வர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, ஏரியை மீட்க, பொதுப்பணித் துறைக்கு, சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.விரட்டப்பட்ட தன்னார்வலர்கள்!கடந்தாண்டு ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, நம் நாளிதழ், 'நமக்கு நாமே' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நீர்நிலைகளை பாதுகாக்க, தன்னார்வலர்கள், நலச்சங்கத்தினர், மக்கள் களம் இறங்கினர். இதன் பலனாக, பல நீர் நிலைகளுக்கு விமோசனம் பிறந்தது. அதேபோல, பள்ளிக்கரணை பெரிய ஏரியை சுத்தப்படுத்த தன்னார்வலர்கள் சிலர் முயன்றனர். அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் பணி செய்ய விடாமல், விரட்டிய சம்பவம் அரங்கேறியது. -- நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X