சென்னையில் படிப்படியாக குறையுது கொரோனா | சென்னை செய்திகள் | Dinamalar
சென்னையில் படிப்படியாக குறையுது கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
02:38

சென்னை, தமிழகத்தில் நேற்று, 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.30 லட்சமாக உயர்ந்துஉள்ளது. அதேநேரத்தில், 82 ஆயிரத்து, 324 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பி உள்ளனர். சென்னையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது.சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 101 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் நேற்று மட்டும், 37 ஆயிரத்து, 309 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 3,680 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அதில், சென்னையை சேர்ந்தவர்கள், 1,205 பேர். அதேபோல், செங்கல்பட்டில், 242; கன்னியாகுமரியில், 105; மதுரையில், 192; சேலத்தில், 127; தேனியில், 108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில், 219; திருவண்ணாமலையில், 103; துாத்துக்குடியில், 195; திருநெல்வேலியில், 145; திருச்சியில், 109; வேலுாரில், 140; விருதுநகரில், 143 பேரும் பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர். மேலும், 13 மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.மார்ச் முதல் நேற்று வரை, 14.64 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில், 74 ஆயிரத்து, 969; செங்கல்பட்டில், 7,635; காஞ்சிபுரத்தில், 3,099; மதுரையில், 5,482; திருவள்ளூரில், 6,075; திருவண்ணாமலையில், 2,861; வேலுாரில், 2,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும், 20 மாவட்டங்களில், தொற்று பாதிப்பு 1,000த்தை தாண்டி அதிகரித்து வருகிறது. ஆறுதல் தரும் வகையில், நேற்று, 4,163 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மொத்தம், 82 ஆயிரத்து, 324 பேர் குணமடைந்துஉள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த, ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவால் இதுவரை, 1,829 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னையில், 1,196; செங்கல்பட்டில், 152; மதுரையில், 101; திருவள்ளூரில், 118 பேர் இறந்துஉள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X