அரசு பள்ளி மாணவர்களுக்கு 'டிவி' சேனல் மூலமாக கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
10:00

கோபி: அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'டிவி' சேனல்கள் மூலமாகத்தான், கல்வி போதிக்க போகிறோம்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.



ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பெரியகொடிவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், 194 பயனாளிகளுக்கு, வணிக கடனுதவியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கி, அவர் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 1,000 கோடி ரூபாய் பயிர்க்கடனாக, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 130 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா சூழலில், பள்ளி கல்வித்துறை என்ன செய்யப்போகிறது என சிலர் கேள்வி எழுப்பினர். ஆன்லைன் மூலமாக கல்வி போதிக்க போகிறார்களா அல்லது சேனல்கள் மூலமாக கல்வி போதிக்கிறார்களா என கேள்வி எழுப்புகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'டிவி' சேனல்கள் மூலமாகத்தான், கல்வி போதிக்க போகிறோம். இதற்காக ஐந்து சேனல்களிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக, இரண்டு சேனல்கள் ஒப்புதல் வழங்கவுள்ளனர். வகுப்பு வாரியாக, பாடத்திட்டத்தை காணொலியாக ஒளிபரப்பப்படும். கிராம பகுதியில் செல்போன் இல்லாமல், ஆன்லைன் கல்வி எப்படி சாத்தியமாகும் என சிலர் கேள்வி எழுப்பினர். எங்களை பொறுத்தவரை, திட்டத்தை செயல்படுத்திய பின், அதுகுறித்த கருத்துக்களை தெரிவித்தால், அந்த குறை நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X