இறந்தவர் உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்; ஐ.எம்.ஏ., அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
10:00

ஈரோடு: 'இறந்தவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவாது. இறந்த உடலை அடக்கம் செய்ய, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ராஜா கேட்டுக் கொண்டார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஈரோட்டில் இறந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்ய, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது, வேதனை அளிக்கிறது. சென்னையில் ஒரு டாக்டர், கொரோனா தொற்றால் உயிர் இழந்தபோது, எதிர்ப்பு தெரிவித்தவர்களை, போலீசார் கைது செய்தனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலோ, தும்மினாலோதான் நோய் பரவும். இறந்தவர்களிடம் இருந்து எப்படி கிருமி வரும்? இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா தாக்கி இறந்தவரின் உடலை, உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி, உடலை பதப்படுத்தி, பாதுகாப்பு செய்யப்படுகிறது. இறந்தவரின் உடலில் இருந்து நோய் பரவும் என்பது, மக்களின் மூட நம்பிக்கையின் பிரதிபலிப்பு. உடலை அடக்கம் செய்பவர்களே, துணிச்சலுடன் சென்று சேவை செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது, உடல் புதைக்கப்படுவதால், எவ்வாறு நோய் பரவும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X