குழந்தையை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய்: குடும்பத் தகராறில் விபரீதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
19:36


உளுந்துார்பேட்டை:

உளுந்துார்பேட்டை அருகே குடும்பத் தகராறில் இரு குழந்தைகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 2 வயது குழந்தை இறந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வடகுறும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 35; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி, 26; எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது குழந்கைள் கவிப்பிரியா, 7; ரித்விகா, 2; கடந்த 7ம் தேதி பெருமாள் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று வீட்டிற்கு வந்தவர், குளித்து விட்டு ஜெயந்தியிடம் துண்டு கேட்டுள்ளார். அவர், அழுக்கு துண்டைக் கொடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த, பெருமாள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். மனமுடைந்த ஜெயந்தி, இரு மகள்களுக்கும் எலி பேஸ்ட் கொடுத்து விட்டு, அவரும் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சென்னை, ஸ்டான்லி மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி குழந்தை ரித்விகா இறந்தது.கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயந்தியின் தாய் கொளஞ்சி, 53; கொடுத்த புகாரின் பேரில், பெருமாள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X