மார்க்கெட் கமிட்டியில் பருத்தி ஏலம் அதிக விலை கிடைத்ததால் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
22:39

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் மார்க்கெட் கமிட்டியில் 30 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக நேற்று நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில், அதிகபட்ச விலையாக ரூ.5450க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டா பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்ட பருத்தி விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர். இதனை தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது.செய்தி எதிரொலியாக, அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மற்றும் மாவட்ட விற்பனைக் குழு சார்பில் காட்டுமன்னார்கோவில் மார்க்கெட் கமிட்டியில் 30 ஆண்டுகளுக்கு பின், விவசாயிகளிடம் இருந்து பருத்தி மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் செய்யும் திட்டம் நேற்று முதல் செயல்படுகிறது.



மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் முருகன், பங்கேற்று துவக்கி வைத்தார். மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் சுப்ரமணியன், வேளாண் துறை துணை இயக்குனர் பிரேம் சாந்தி, கலெக்டர் நேர்முக உதவியாளர்( வேளாண்) ஜெயக்குமார், மாவட்ட விற்பனைக் குழு செயலாளர் ரவி, இளங்கீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.காட்டுமன்னார்கோவில், குமராட்சியில் உள்ள எய்யலுார், ஆதனுார், குணவாசல், மோவூர், மா.அரசூர், குப்பங்குழி, எடையார், பருத்திக்குடி கிராமங்களில் இருந்து 147 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு லாட்டில் வைத்தனர். கோவை இந்திய பருத்தி கழகம், பண்ருட்டி, விழுப்புரம், கடலுார் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பங்கேற்றனர்.



ஏலத்தில் 550 குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. பருத்தி விலை அதிகபட்சமாக ரூ.5,450, குறைந்தபட்ச விலையாக ரூ.3,436 என கொள்முதல் செய்தனர். நேற்றைய சராசரி கொள்முதல் விலை ரூ.4,800 ஆக இருந்தது.டெல்டா பகுதியில் ரூ. 3,600 த்திற்கு பருத்தி கொள்முதல் செய்த நிலையில் தற்போது மார்க்கெட் கமிட்டி மூலம் அதிக விலைக்கு கொள்முதல் செய்ததால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். விற்பனைக்கு அதிகளவு பருத்தியும் வருவதால் அதிகாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X