சுருக்குமடி வலைகளை அனுமதிக்க வலியுறுத்தி போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
00:26

கடலுார் : சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி, கடலுார் மற்றும் சிதம்பரத்தில் மீனவர்கள், கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை செய்துள்ளது.



இந்நிலையில் கடந்த 1ம் தேதி கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள், சுருக்குமடி வலையுடன் மீன்பிடிக்க தயாரான 30க்கும் மேற்பட்ட படகுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு சீல் அகற்றப்பட்டது.இந்நிலையில், கடந்த 9ம் தேதி தடையை மீறி சுருக்குமடி வலையில் மீன்பிடித்து ஏற்றி வந்த 10 வாகனங்களை மீன்வளத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.இதை கண்டித்தும், சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும், முதுநகரில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று முன்தினம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை ரூ. 4.70 லட்சத்திற்கு ஏலம் விட்டனர். போராட்டம்மீனவர்கள் யாரும் நேற்று தொழிலுக்கு செல்லாமல், சுருக்குமடி வலைக்கு விதித்த தடையை நீக்கக் கோரி கடலுார், சிதம்பரம் மற்றும் எம்.ஜி.ஆர்.திட்டு ஆகிய இடங்களில், மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுருக்குமடி வலைக்கு தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து, படகுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.கடலுார் சில்வர் பீச்சில் நடந்த போராட்டத்தில் நல்லவாடு, தாழங்குடா, தேவனாம் பட்டினம், சொத்திக்குப்பம், ராஜாபேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் பங்கேற்றனர்.



தீக்குளிக்க முயற்சிபோராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், ஆர்.டி.ஓ.,ஜெகதீஸ்வரன், தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, 500க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் திடீரென கடலில் இறங்கி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தனர். எஸ்.பி., தலைமையிலான போலீசார், தீயணைப்பு வீரர்கள் கடலில் இறங்கி, பெண்களிடம் பேசி அவர்களை வலுக்கட்டாயமாக கரைக்கு அழைத்து வந்தனர்.



போராட்டத்தில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை மிரட்டல்களால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.பின்னர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், காலை 7:00 மணிக்கு துவங்கிய போராட்டம் பகல் 2:00 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.சிதம்பரம்சிதம்பரம் எம்.ஜி.ஆர் திட்டில் நடந்த போராட்டத்திலும், மீனவ கிராமப் பெண்கள் திடீரென கடலில் இறங்கி போராடியதோடு, தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X