கடலுாரில் தொற்று பாதிப்பு 1,505 ஆக அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
00:37

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று, மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதித்தோர் எண்ணிக்கை 1,505 ஆக உயர்ந்துள்ளது.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 1,488 பேர் என மாவட்டநிர்வாகம் அறிவித்தது. நேற்று, மேலும் 17 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதித்தோர் எண்ணிக்கை 1,505 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் வரை 1,031 பேர் குணமடைந்தனர். நேற்று மேலும் 46 பேர் வீடு திரும்பியதால் குணமடைந்தோர்எண்ணிக்கை 1,077 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 31,795 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1,505 பேருக்கு தொற்று உறுதியானது. 28,304 பேருக்கு தொற்று இல்லை.



1,986 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் 49 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் உள்ளன.மேலும் ஒருவர் பலிகடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. பண்ருட்டியைச் சேர்ந்த77 வயது முதியவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில்கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.



விழுப்புரம் அரசு பள்ளி ஆசிரியைக்கு தொற்றுவிழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை, பஸ் கண்டக்டர் உட்பட நேற்று 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருந்தது. இவர்களில், 19 பேர் இறந்தனர். 509 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஆசிரியை, பஸ் கண்டக்டர் என 44 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 1,455 ஆக உயர்ந்துள்ளது.திண்டிவனம் அடுத்த கீழ்பசார் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது கிராம உதவியாளர், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த 54 வயது அரசு பஸ் கண்டக்டர், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் 30 வயது பெண்.விழுப்புரத்தைச் சேர்ந்த 50 வயது அரசு பள்ளி ஆசிரியை. திண்டிவனம் கிளைச் சிறையில் விசாரணை கைதியாக உள்ள 48 வயது நபர் அடங்குவர்.கொரோனா முன்னெச்சரிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தில் 344 பேர் வீடுகளிலும், சுகாதார துறை சிறப்பு மையங்களில் 207 பேரும், தனிமைப்படுத்தபட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் மேலும் 102 பேருக்கு தொற்றுகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 1,621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 643 பேருக்கு பரிசோதனை செய்ததில் 102 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,723 ஆக உயர்ந்தது.இதில் 958 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் இறந்தனர். மருத்துவ சிகிச்சையில் உள்ள 760 பேரில் 305 பேருக்கு மட்டுமே அறிகுறி உள்ளது. 455 பேருக்கு அறிகுறி இல்லை.கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி முதல் நேற்று வரை கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் 461 பேரும், திருநாவலுார், திருக்கோவிலுார் உள்ளிட்ட 9 வட்டாரங்களில் 600 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X