| கார் மோதி மின் கம்பம் 'டமால்' :அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி Dinamalar
கார் மோதி மின் கம்பம் 'டமால்' :அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
01:38

திருப்பூர்:வேகமாக சென்ற கார் மோதி, மின்கம்பம் முறிந்து விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.மங்கலம் - சோமனுார் நெடுஞ்சாலை ரோடு அதிக வளைவுகளுடன் இருக்கிறது. அக்ரஹாரப்புத்துார் வழியாக வரும் வாகனங்கள், மிக வேகமாக சென்று வருவதால், பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியாத அளவுக்கு ஆபத்து இருக்கிறது.அக்ரஹாரப்புத்துார் வசந்தம் நகர் அருகே, மங்கலத்தை நோக்கி வந்த கார், வேகமாக சென்று, வசந்தம் நகரில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.மின்கம்பம் முறிந்து விழுந்ததால், சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள், மின் வினியோகத்தை சரிசெய்தனர். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த,வேகத்தடை அமைக்க அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X