| 'மக்களுக்கு மரியாதை' :எஸ்.பி., அறிவுறுத்தல் Dinamalar
'மக்களுக்கு மரியாதை' :எஸ்.பி., அறிவுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
01:38

திருப்பூர்:காங்கயம் போலீசாருக்கு விழிப்புணர்வு அறிவுரையை எஸ்.பி., வழங்கினார்.சாத்தான்குளம் சம்பவத்துக்கு பின், போலீசார் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும் போலீசாருக்கு தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்து வருகிறது.அதன்படி, காங்கயம் சப்-டிவிஷன் போலீசாருக்கான விழிப்புணர்வு கூட்டம், படியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில், எஸ்.பி., திஷா மிட்டல் பங்கேற்று அறிவுரை வழங்கினார்.'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' குழுவினரை போலீஸ் ஸ்டேஷனில் அனுமதிக்க கூடாது. நிற்காமல் செல்லும் வாகனத்தை துரத்த வேண்டாம். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட, அதிக நேரம் கடைகள் திறந்து இருந்தால் வருவாய் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். போலீஸ் 'செக் போஸ்ட்'களில் போலீசார் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் உட்பட அறிவுரை கூறினார்.அதேபோல், பொதுமக்கள், போலீசார் நல்லுணர்வு கடைபிடிப்பது குறித்து திருப்பூர் மாநகர போலீசாருக்கு விழிப்புணர்வு கூட்டம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. திருப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பத்ரிநாராயணன் பங்கேற்று அறிவுரை வழங்கினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X