ரூ.165 கோடி நிலுவையால் கைத்தறி தொழில் முடக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ரூ.165 கோடி நிலுவையால் கைத்தறி தொழில் முடக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
02:27

பொள்ளாச்சி:தமிழகத்தில் உள்ள, 1,350 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய, 165 கோடி ரூபாயை விடுவித்து, வேலை கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு நெசவாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.தமிழ்நாடு முழுவதும், 1,350 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. சங்கங்களால், நெசவுக்கு தேவையான நுால்கள் வினியோகிக்கப்படுகின்றன.நெசவு செய்த சேலைகள், கூட்டுறவு சங்கங்களால், கொள்முதல் செய்யப்பட்டு, கோ - ஆப் டெக்ஸ் ஷோரூம்களில், விற்பனை செய்யப்படுகின்றன. துணி விற்பனையால், கூட்டுறவு சங்கங்களுக்கு குறிப்பிட்ட தொகை லாபமாக கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு, இத்தொகை வழங்கப்படாமல், 165 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.அண்ணா தொழிற்சங்க நெசவாளர் அணி பொருளாளர் மனோகரன் கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக நெசவு தொழில் முடங்கி, நெசவாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். தொழில் முடங்கியதால், கூட்டுறவு சங்கங்களால், அரசின் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.கூட்டுறவு சங்கங்களுக்கு கிடைக்க வேண்டிய, 165 கோடி ரூபாய் கிடைத்திருந்தால், தொழில் முடங்காமல், நெசவாளர்கள் தொடர்ந்து நெசவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய, தொகையை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X