'ஆர்கானிக்' சான்று பெற்றால் பயன்கள் ஏராளம்! விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 ஜூலை
2020
02:36
பதிவு செய்த நாள்
ஜூலை 12,2020 02:30

கோவை:''ஆர்கானிக் சான்று பெற்ற விவசாயியாக மாறினால், விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்; ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்,'' என, சான்றளிப்புத்துறை இயக்குனர் சுப்பையா தெரிவித்தார்.பயிர் சாகுபடிக்கு ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், மனித குலம் மட்டுமின்றி, உலகில் வாழும் உயிர்கள் அனைத்துமே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.நிலம், நீர், காற்றும் கடுமையாக மாசுபடுகிறது.


இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் தான், உலக நாடுகள் அனைத்தும் ஆர்கானிக் பயிர் சாகுபடியை முன்னெடுக்கின்றன.நம் நாட்டிலும் மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து, ஆர்கானிக் சாகுபடிக்கு மாறும் விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றன.


விண்ணப்பிப்பது எப்படி?தமிழக விதைச்சான்று மற்றும் ஆர்கானிக் சான்றளிப்புத்துறை இயக்குனர் சுப்பையா கூறியதாவது:ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்த்து, இயற்கையான இடுபொருட்களை கொண்டு பயிர் சாகுபடி செய்வது தான், 'ஆர்கானிக்' சாகுபடி என்கிற அங்கக பண்ணையம்.


இது பற்றி விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.ஆர்கானிக் சான்றளிப்புத்துறை அலுவலகம், கோவையில் செயல்படுகிறது. விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொண்டால், நல்ல லாபம் பெற முடியும். ஆர்கானிக் சான்று பெற விரும்பும் விவசாயி, விண்ணப்ப படிவத்துடன், ஆண்டு பயிர் திட்ட படிவம், துறையுடன் ஒப்பந்த படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும்.


நிலத்துக்கான கம்ப்யூட்டர் சிட்டா, பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், இரண்டு போட்டோ, நிலத்தின் எப்.எம்.வி., ஸ்கெட்ச் ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும். ஆர்கானிக் சான்று பெறுவதற்காக, 'டைரக்டர் ஆப் ஆர்கானிக் சர்ட்டிபிகேஷன்' என்ற பெயரில் 'டிராப்ட்' கட்டணம் செலுத்த வேண்டும். ஐந்து ஏக்கருக்கு கீழ் இருந்தால், 2,700 ரூபாய், ஐந்து ஏக்கருக்கு மேல் இருந்தால், 3,200 ரூபாயும்பதிவு கட்டணமாக பெறப்படும்.


கட்டணம் செலுத்துவோருக்கு, சான்றிதழ் பதிவு எண் வழங்கப்படும். மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் இந்த நடைமுறை முடிந்தவுடன், 'அபிடா' நிறுவனத்தால், விவசாயிக்கு வாய்ப்பு சான்றிதழ் வழங்கப்படும்.ஆண்டுதோறும் புதுப்பிப்பு இந்த சான்று பெற்றாலே, ஒருவர் ஆர்கானிக் விவசாயி என கருதப்படுவார். சான்று பெற்ற விவசாயிகள், தினசரி பதிவேடு, உற்பத்தி பதிவேடு, விற்பனை பதிவேடு பராமரிக்க வேண்டும்.


சம்பந்தப்பட்ட விளைநிலம், துறை அலுவலர்களின் கண்காணிப்பில் இருக்கும். வாய்ப்பு சான்று பெற்ற பிறகுதான் விவசாயிகளின் காத்திருப்பு காலம் தொடங்கும். தோட்டப்பயிர்களுக்கு மூன்றாம் ஆண்டில் காத்திருப்பு காலம் முடிந்து விடும். மரப்பயிர்கள் என்றால், நான்காம் ஆண்டில் முடியும். சான்று பெற்ற ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் எந்தவித பூச்சி மருந்தின் படிவு இல்லாத நிலமாக மாற்றப்பட வேண்டும். முழுமையான ஆர்கானிக் விவசாயியாக மாற உதவி செய்வோம். சான்றிதழ் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.


நுகர்வோருக்கு தரமான பொருள் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த சான்றிதழ் வழங்குவதன் நோக்கம்.இவ்வாறு, சுப்பையா கூறினார்.வழிகாட்ட நாங்கள் தயார்!ஆர்கானிக் சான்று பெறுவதற்காக, முன்னோடி விவசாயிகள் சிலர் தானாகவே தேடி வருகின்றனர். பலருக்கு வழிமுறை தெரிவதில்லை. இயற்கையான முறையில் பயிர் சாகுபடி செய்தாலும், அதற்கு சான்று பெறுவது எப்படி என்றுதெரிவதில்லை.


அதேபோல, இயற்கை முறையில் சாகுபடி செய்யும் எண்ணம் இருந்தாலும், அதை செயல்படுத்துவது எப்படி, சான்று பெற்றால் என்ன லாபம் என்றும் பலருக்கு தெரிவதில்லை. இது போன்ற, வழிமுறை தெரியாத விவசாயிகள், எங்களை போன் மூலம் தொடர்பு கொண்டாலே போதும். அனைத்து விதமான வழிகாட்டுதலும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உரிய பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.-சுப்பையா,- ஆர்கானிக் சான்றளிப்புத்துறை இயக்குனர்.


உயிர் வேலி அமைக்கணும்!


ஆர்கானிக் சான்றளிப்புத்துறை உதவி இயக்குனர் பிரியதர்ஷினி கூறியதாவது:விவசாயிகள், தனியாகவோ, குழுவாகவோ இணைந்து சான்று பெறலாம். ஒரு விவசாயி மட்டும் தனியாக சான்று பெறுவதாக இருந்தால், பக்கத்து தோட்ட எல்லையில் கட்டாயம் உயிர் வேலி அமைக்கப்பட வேண்டும். எல்லையில் இருக்கும் மூன்றடி நிலத்தில் சாகுபடியாகும் பயிர், ஆர்கானிக் ஆக கருதப்படாது.


பக்கத்து தோட்டத்தில் இருக்கும் பயிர்கள் பற்றியும் அலுவலர்கள் ஆய்வு செய்வர்.தமிழகத்தில் தனி நபராக, 700 விவசாயிகளும், குழுவாக, 2,000 விவசாயிகளும், இதுவரை ஆர்கானிக் சான்று பெற்று சாகுபடி செய்கின்றனர். சான்று பெற்ற மொத்த விளைநில பரப்பு, 31 ஆயிரம் ஏக்கர். மஞ்சள், முருங்கை, தேயிலை, தேங்காய் எண்ணெய்க்கு ஆர்கானிக் சான்று பெற்றிருந்தால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, கூடுதல் லாபம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, உதவி இயக்குனர் தெரிவித்தார்.


அடையாளம் காண்பது எப்படி?ஆர்கானிக் சான்று பெற்றதாக இருந்தால் மட்டுமே, வேளாண் விளைபொருளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். சில்லரை விற்பனை கடைகளில் கூட, ஆர்கானிக் சான்று பெற்ற விளைபொருட்களுக்கு குறைந்தபட்சம், 20 சதவீதம் விலை அதிகம் கிடைக்கும்.நுகர்வோர், ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்த வேளாண் விளைபொருட்களை அடையாளம் காண வசதியாக, 'ஜெய்விக் பாரத்' என்ற உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிறுவன அங்கீகாரம் பெற்ற, 'லோகோ' இருக்கும்.


வாருங்கள் விவசாயிகளே!


அங்கக பண்ணையம் குறித்து மேலும் விவரம் தேவைப்படும் விவசாயிகள், கோவை, தடாகம் சாலையில் அமைந்துள்ள விதைச்சான்று மற்றும் ஆர்கானிக் சான்றளிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது போன் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.தர மேலாளர் மற்றும் துணை இயக்குனர் ஈப்பன் 7592950188 என்ற மொபைல் எண்ணிலும், உதவி இயக்குனர் பிரியதர்ஷினி 94434 48289 என்ற மொபைல் எண்ணிலும், அலுவலகத்தை 0422 298 2985 என்ற டெலிபோன் எண்ணிலும், அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X