| சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பாதிப்பு Dinamalar
சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:41

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், கிராம மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சி ரயில் பாதையில் 3 ஆண்டுகளுக்கு முன் கட்டிய சுரங்கப்பாதை வழியாக கவணை, சித்தேரிக்குப்பம், மாத்துார், சின்னபண்டாரங்குப்பம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையில் சுரங்கப்பாதை மூழ்கியதால், ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இருவழி ரயில் பாதை பணியின்போது, மூடப்பட்ட கல்வெர்ட்டை மீண்டும் கட்டித் தருவதுடன், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், கல்வெர்ட் கட்டாமல், மின் மோட்டார் மூலம் மழைநீரை அகற்றினர்.இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழைக்கு சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்களின் இன்ஜின்கள் பழுதாகும் அபாயம் உள்ளதால், சுரங்கப்பாதைக்கு மேல்புறம் ரயில் பாதையை கடந்து செல்கின்றனர்.எனவே, செம்பளக்குறிச்சி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X