| தீக்குளிக்க முயற்சி 6 பேர் மீது வழக்கு Dinamalar
தீக்குளிக்க முயற்சி 6 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:43

கடலுார்; சுருக்கு வலைக்கு அனுமதி கோரி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலுார் தேவனாம்பட்டிணம், நல்லவாடு, தாழங்குடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி சில்வர் பீச்சில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் 144 தடை உத்தரவை மீறி டீசலை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதாக தேவனாம்பட்டிணத்தைச் சேர்ந்த அசோக், பெருமாள், மதன், ராஜா, சங்கர், சத்தியராஜ் ஆகிய 6 பேர் மீது தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஒன்று திரண்டு உண்ணாவிரதம் இயக்க முயன்றதாக அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ், சிவா, பத்மநாபன் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X