கடலுார்: கடலுார் மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கலைக்குழுவினர், இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்க விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடலுார் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழக கிராமிய கலைகளை வளர்க்கும் கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க, தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ. 5000, கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ. 10 ஆயிரம் வீதம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிதியுதவி வழங்குகிறது.தனிப்பட்ட கலைஞரின் வயது கடந்த மார்ச் 31ம் தேதியில் 16 நிரம்பியும் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும், கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தை பதிந்திருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெறலாம்.தபால் மூலம் விண்ணப்பம் பெற சுய முகவரியிட்ட உரையில் ரூ. 10க்கான தபால் தலை ஒட்டி, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-500028 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதே முகவரியில், வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.