| உச்சம்: மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1,500ஐ கடந்ததுபொதுமக்கள் ஒத்துழைத்தால் பாதிப்பு குறையும Dinamalar
உச்சம்: மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1,500ஐ கடந்ததுபொதுமக்கள் ஒத்துழைத்தால் பாதிப்பு குறையும
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:51

கடலூர்: கடலுார் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு 1,500 ஐ கடந்துள்ளது.



பொது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, நோய் தொற்று கபடிப்படியாக குறையும்.கடலுார் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்து, கிருமி நாசினி தெளித்து, சுகாதாரப் பணிகள் நடக்கின்றன.பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வெளியே செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர், முக கவசம் அணியாதோர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அபாராதம் விதிப்பதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.மூன்று மாதங்களில் அதிகரிப்புஇதற்கிடையே வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதன் முதலாக 3 பேர் கொரோனா தொற்றால் பாதித்தனர். டாக்டர்கள், போலீசார், செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



கடந்த மூன்று மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,500 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை பாதிப்பு 1,521ஆக இருந்தது. மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 12 பேர் இறந்துள்ளனர்.மக்கள் அலட்சியம்அதே சமயம் பொது மக்கள் மத்தியில் அலட்சியம் நிலவி வருகிறது. இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்வது, கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை.முக கவசம் அணியாமல் சுற்றித் திரிவது, கிராமப் புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



எனவே, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.அதே சமயத்தில், பொது மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே, நோய் தொற்று குறையும்.1,093 பேர் 'டிஸ்சார்ஜ்'மாவட்டம் முழுவதும் இதுவரை 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்துள்ளனர்.



தொற்று பாதிக்கப்பட்டவர்கள், சிதம்பரம், கடலுார், நெய்வேலி, விழுப்புரம், திருச்சி, சேலம், சென்னை, கோயமுத்துார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுச்சேரி உட்பட பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதே சமயத்தில், பாதிக்கப்பட்ட 1,521 பேரில், நேற்று முன்தினம் வரை 1,093 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 288 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் 51 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X