| கொரோனா பரவல் அதிகரிப்புவிருதை நகரில் நுழைய தடை Dinamalar
கொரோனா பரவல் அதிகரிப்புவிருதை நகரில் நுழைய தடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:52

விருத்தாசலம்; கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், விருத்தாசலம் நகருக்குள் வெளிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.



விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடை ஊழியர்கள் இருவர், கொரோனா பாதித்து இறந்தனர். பின்னர், மளிகை, கிப்ட் ஷாப், கவரிங் கடை உரிமையாளர்கள் என அடுத்தடுத்து இறந்தனர். மேலும், மாஜிஸ்திரேட், வழக்கறிஞர்கள், தாசில்தார், சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு, சுகாதார ஆய்வாளர் என ஏராளமானோருக்கு பாதிப்பு உறுதியாகியது.



அதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், நகருக்குள் பிற நபர்கள் நுழைவதை தடை விதித்து, பிரதான நான்கு முனையிலும் தடுப்புகள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது.இதற்காக, 'கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதி இல்லை' என்ற வாசகத்துடன் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட உள்ளன.



இது குறித்து கமிஷனர் (பொறுப்பு) பாண்டு கூறுகையில், 'நகரில் தொற்று பாதிப்பு குறைக்கும் வகையில், வெளி நபர்கள் உள்ளே நுழைய தடை விதித்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட உள்ளது. நாச்சியார்பேட்டை, கடைவீதி போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம், நீதிமன்ற முகப்பு, பெரியார் நகர் பஸ் நிறுத்தம் ஆகிய நான்கு பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட உள்ளது' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X