| டெல்டா பகுதியில் தொடர் மழை வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்வு Dinamalar
டெல்டா பகுதியில் தொடர் மழை வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:53

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது.



காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டா பகுதியில் கடும் வெயில் தாக்கத்தால் வறட்சி காணப்பட்டது. விவசாயிகள் சாகுபடிக்கான மராமத்துப் பணிகள் இன்னும் துவக்கவில்லை.கடந்த நான்கு நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று காட்டுமன்னார்கோவில் பகுதியில் 4.5 செ.மீ., பெய்தது.டெல்டா பகுதியில் பெய்து வரும் மழையால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.



கடந்த 21ம் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.வீராணம் ஏரிக்கு கடந்த இரு வாரங்களாக 200 முதல் 230 கன அடி தண்ணீர் மட்டுமே வரத்து இருந்தது. தற்போது பெய்யும் மழையால் ஏரிக்கு தண்ணீர் வரத்து 460 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று வீராணம் ஏரியின் நீர் மட்டம் 42.46 அடியாக (418.45 மில்லியன் கன அடி) இருந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X