| மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு: வீடுகளில் மக்கள் முடக்கம்: சாலைகள் 'வெறிச்' Dinamalar
மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு: வீடுகளில் மக்கள் முடக்கம்: சாலைகள் 'வெறிச்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:54

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 6ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. எனினும் அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதம் வரும் 4 ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகளின்றி ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.அதன்படி, ஞாயிற்று கிழமையான நேற்று கடலுார் மாவட்டத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நகரம் மற்றும் கிராமங்களில் சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை மூடப்பட்டிருந்தன.பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கினர். கார், ஆட்டோக்கள் இயங்கவில்லை. அரசு வாகனங்கள், மருத்துவ சேவை வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. எனினும், பால், மருத்துவ சிகிச்சை போன்ற வாகனங்களுக்கு மட்டும் டீசல் நிரப்பப்பட்டது.மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள், மீன் அங்காடிகள், காய்கறி சந்தைகள், இறைச்சி சந்தைகள் வெறிச் சோடி காணப்பட்டன. ஒரு சில இடங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை மறைமுகமாக நடந்தது.மாவட்டத்தில் உட்கோட்டங்களில் உள்ளநிரந்தர சோதனைச் சாவடி மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில்போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X