| கால்நடை மருத்துவரின்றி விவசாயிகள் அவதி Dinamalar
கால்நடை மருத்துவரின்றி விவசாயிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:55

குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடியில் காலியாக உள்ள கால்நடை மருத்துவர் பணியிடத்தை நிரப்பாததால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



குறிஞ்சிப்பாடி நகரைச் சுற்றி ஏராளமான கிராமங்களில் பசு, உழவு மாடு, வளர்ப்பு பிராணிகளான ஆடு, கோழி, நாய், பூனை வளர்க்கப்படுகின்றன. இவற்றிற்கு சிகிச்சை பெற தினமும் ஏராளமானோர் குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவமனைக்கு வருகின்றனர். சினை ஊசி, குடல் புழு நீக்கம், தடுப்பூசி போடுவதற்கும் பொதுமக்கள் அதிகளவில் வந்துச் செல்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கு பணியில் இருந்த மருத்துவர் இடமாறுதலில் சென்றார். அதன்பிற்கு புதிய மருத்துவரை நியமிக்கவில்லை. ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர் மட்டுமே கால்நடைகளுக்கு கிசிச்சைக்கு அளிக்கின்றனர். புவனகிரி கால்நடை மருத்துவமனை மருத்துவர் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இதனால் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து கால்நடைகளுக்கு சிகிச்சை பெறும் நிலை உள்ளது.எனவே, கால்நடை மருத்துவர் பணியிடத்தை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X