| கடலுார் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு Dinamalar
கடலுார் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:56

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் அரசின் முழு ஊரடங்கு குறித்து கலெக்டர் சந்திரசேகர சகாமுரி நேற்று ஆய்வு செய்தார்.



கடலுார் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலுார், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆய்வு செய்தார்.பின்னர், அவர், கூறியதாவது: மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரானா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் கிருமிநாசினிகள் தெளித்து துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது மக்கள் நோய் பரவாத வகையில், தங்கள் பகுதிகளை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பொது மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நோய்த்தொற்றை கட்டுப்பாட்டில் வைக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தாங்களே முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ தகவல்கள் மற்றும் அது தொடர்பான சந்தேகங்களை பெற மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொண்டு நிவர்த்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X