ரத்தினபுரியில் காத்திருக்கிறது சாக்கடை கால்வாய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
23:35

குழந்தைகள் விழும் முன் மூடி போட வேண்டும்

பணியை முழுமையாக செய்வதில்லைசாய்பாபா காலனி, எஸ்.கே.வி. நகரில், சாக்கடை கால்வாயில் இருந்து அகற்றப்படும் கழிவு, அப்புறப்படுத்தப்படாமல், கால்வாய் அருகிலேயே குவிந்துள்ளது. இக்கழிவுகள் மீண்டும் கால்வாயில் விழுந்து, அடைப்பு ஏற்படுகிறது.- ஆனந்த், எஸ்.கே.வி.நகர்.

சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள்துடியலுார், வட்டமலைபாளையத்தில், சாலை செப்பனிடும் பணி துவங்கி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சாலை முழுவதும் ஜல்லிக்கற்களாக உள்ளது. இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.- சங்கீதா, வட்டமலைபாளையம்.

விபத்து அபாயம்மாநகராட்சி, 45வது வார்டுக்கு உட்பட்ட, ரத்தினபுரி, தில்லை நகர், சுந்தரப்பகவுண்டர் வீதியில் உள்ள, சாக்கடை கால்வாய் மூடி சிதிலமடைந்துள்ளது. குழந்தைகள் இதில், சிக்கி விபத்துக்குள்ளாகும் முன், மூடியை சீரமைக்க வேண்டும்.- உமாராணி, தில்லை நகர்.

வெளிச்சமில்லைசவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகர், இரண்டாவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 92), கடந்த மூன்று மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.- பாண்டியன், அன்னை வேளாங்கண்ணி நகர்.

இப்ப கிரிக்கெட் முக்கியமாவடவள்ளி, பெரியார் நகர், போத்தனுார் செட்டிபாளையம் ரோடு, கோவை கார்டன், கோவைபுதுார் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், கொரோனா அச்சம் இன்றி, இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து, கிரிக்கெட் விளையாடுகின்றனர். போலீசார் ரோந்து சென்று, இவர்களை எச்சரிக்கை செய்வது அவசியம்.- சந்துரு, வடவள்ளி.

வாகன ஓட்டிகளை திணறடிக்கும் குழிகோவைபுதுார், க்யூ பிளாக்கில், பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக, சாலையின் நடுவில், தோண்டப்பட்ட குழி, கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக மூடப்படாமல் உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழிக்குள் தவறி விழுகின்றனர்.- சங்கரநாராயணன், கோவைபுதுார்.

துார்வாரணும்காளப்பட்டி, நேரு நகர் ஐந்தாவது வீதி, பெரியார் நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ரேணுகா, பெரியார் நகர்.

வாகன ஓட்டிகள் கிலிகருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, சோமனுார், கிருஷ்ணாபுரம், விநாயகர் கோவில் அருகில், சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய குழியால், விபத்து அபாயம் உள்ளது.- ராமசாமி, சோமனுார்.

பன்றிகளால் தொல்லைமாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், மேட்டூர், ஐயப்பன் கோவில் செல்லும் ரோட்டில், பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.- சரவணன், மேட்டூர்.

தெருவிளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, கார்த்திக் நகரில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த ஒரு மாதத்துக்கும், மேலாக விளக்கு எரிவதில்லை.- பழனிசாமி, கார்த்திக் நகர்.

நாய் தொல்லை அதிகம்நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் இவை, வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன; வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- சந்தோஷ், காமதேனு நகர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X